நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

29.08.1905 - 'ஹாக்கி மந்திரவாதி' தயான் சந்தின் பிறந்த தினம் இன்று

உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் 1905-ஆம் ஆண்டு, 29 ஆம் தேதி தயான் சந்த் பிறந்தார். 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவியோகி வேதம்

உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் 1905-ஆம் ஆண்டு, 29 ஆம் தேதி தயான் சந்த் பிறந்தார்.  அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் இயல்பாகவே  உடலைப்  பேணுவது மற்றும் ஒரு நல்ல விளையாட்டு வீரனாக மாறுவதற்குரிய தகுதிகள் அவரிடம் பள்ளிப்பருவத்தில் காணப்பட்டன. ஹாக்கி விளையாட்டில் தனிக்கவனம் செலுத்தி வந்தார். 1922-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயாக பணியில் சேர்ந்தார்.   

தனது தகுதி மற்றும் திறமையின் காரணமாக ஒரு நல்ல ஹாக்கி விளையாட்டு வீரனாக உருவெடுத்த அவர் 1926 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு பயணம் செய்த இந்திய ராணுவ ஹாக்கி அணியில் இடம் பெற்றார். அங்கே வெளிப்படுத்திய தனது திறமைகளின் காரணமாக இந்திய ஹாக்கி அணியில்.இடம் பிடித்தார்.  

பின்னர் 1928-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்  போட்டியில் ஹாக்கி போட்டியில் தனி  ஒருவனாக போராடி இந்தியாவுக்கு தங்க பதக்கம் பெற்றுத் தந்தார்.  தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தார். குறிப்பாக பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில்  தொடர்ந்து ஏழு கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.

இத்தனை புகழ் வாய்ந்த தயான் சந்த்  1979 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.